லெபனானில் இருந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கு கனடா தயாராகி வருவதாக மத்திய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த தயார்படுதலை கனடிய அரசாங்க அதிகாரிகள் முன்னெடுக்கின்றனர்.
மோதல் தீவிரமடைவதை தடுப்பதற்கு இராஜதந்திர முயற்சிகள் தொடர்வதாக கனடிய வெளிவிவகார அமைச்சின் உதவி துணை அமைச்சர் Alexandre Lévêque செவ்வாய்கிழமை (17) தெரிவித்தார்.
இந்த நிலையில் லெபனானில் இருந்து வெளியேறுமாறு கனடியர்களை அரசாங்கம் எச்சரிக்கிறது.
விமானங்கள் மூலம் லெபனானில் இருந்து கனடியர்கள் வெளியேற வேண்டிய நேரம் இது என வெளியுறவு அமைச்சர் Mélanie Joly கூறினார்.
கடந்த வாரம் லெபனானுக்கு ஒரு பயண எச்சரிக்கையை கனடிய அரசாங்கம் வெளியிட்டது.
லெபனானுக்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் கனடியர்கள் தவிர்க்க வேண்டும் என இந்த எச்சரிக்கை பரிந்துரைக்கிறது.
லெபனானின் தெற்குப் பகுதிக்கு அனைத்துப் பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லெபனானில் குறைந்தது 14 ஆயிரம் கனடியர்கள் தற்போது இருப்பதாக கனடிய அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் இந்த எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.