தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலியான ஆறாவது கனடியரின் விபரங்கள் வெளியாகியுள்ளன
பலியான கனடியர்கள் எண்ணிக்கை ஆறு என கனடிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (17) உறுதிப்படுத்தியுள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டார்.
பலியானவர் 23 வயதான Tiferet Lapidot என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது சடலம் செவ்வாயன்று அடையளாம் காணப்பட்டது.
October 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடந்த இசை விழாவில் நிகழ்ந்த ஹமாஸ் தாக்குதல்களின் போது அவர் பிணைக் கைதியாக கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
இரண்டு காணாமல் போன கனடியர்களை கண்டுபிடிக்க முயற்சிகள் தொடர்வதாகவும் வெளிவிவகார அமைச்சர் Melanie Joly கூறினார்
ஏற்கனவே 21 வயதான Netta Epstein, 22 வயதான Shir Georgy, 22 வயதான Ben Mizrachi, 33 வயதான Alexandre Look, 33 வயதான Adi Vital-Kaploun ஆகியோரின் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.