தேசியம்
செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஐந்து கனடியர்கள் பலி

தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஐந்து கனடியர்கள் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலியான கனடியர்கள் எண்ணிக்கை ஐந்து என கனடிய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் மூன்று காணாமல் போன கனடியர்களை கண்டுபிடிக்க முயற்சிகள் தொடர்வதாகவும்  கனடிய அரசாங்கம் தெரிவித்தது.

கனடிய வெளிவிவகார அமைச்சின் பாதுகாப்பு, அவசரகால மேலாண்மைக்கான உதவி துணை அமைச்சர் Julie Sunday இந்த அறிவிப்பை வெளியிட்டார்

இறுதியாக உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்பு, முன்னர் காணாமல் போனவர்கள் என  அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கனடியர்களில் ஒருவர் என தெரியவருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழந்த ஐந்தாவது கனேடியர் 21 வயதான Netta Epstein என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தெற்கு இஸ்ரேலில் ஒரு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

ஹமாஸ் போராளிகளால் சிறை பிடிக்கப்பட்டதாக கூறப்படும் நூற்றுக்கணக்கான பணயக் கைதிகளில் கனடியர்களும் அடங்குகின்றனரா என்பது குறித்து கருத்து தெரிவிக்க அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

Related posts

Easter வார இறுதியில் கடுமையான கட்டுப்பாடுகளையும் COVID தொற்றுக்களையும் கனடா எதிர்கொள்கிறது!

Gaya Raja

உலகத் தலைவர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய பொறுப்பு: Justin Trudeau

Lankathas Pathmanathan

37 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Leave a Comment