கனேடியர்கள் எகிப்து எல்லை வழியாக சனிக்கிழமை (14) காசாவை விட்டு வெளியேறும் திட்டம் இரத்து செய்யப்பட்டது
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் மேற்குத் தூதரகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்த தகவல் வெளியானது.
வெளிநாட்டினர் காசாவை விட்டு எகிப்து எல்லை வழியாக வெளியேற அனுமதிக்கும் திட்டம் நிறுத்தப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் உள்ள கனேடியர்கள் சனிக்கிழமை எகிப்து எல்லை ஊடாக வெளியேற முடியும் என கனடிய வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை (13) தெரிவித்திருந்தது.
ஆனாலும் இந்த திட்டம் நிறைவேறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என கனடாவின் தூதரக சேவைகளுக்கான உயர் அதிகாரி Julie Sunday எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை நிகழவிருந்த இந்த திட்டம் இரத்து செய்யப்படுகிறது என இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.
கனேடிய குடிமக்கள், அவர்களது வெளிநாட்டு உறவினர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் உட்பட கனடாவுடன் தொடர்பில் உள்ள 150 பேர் காசா பகுதிக்குள் இருப்பதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.