தேசியம்
செய்திகள்

இஸ்ரேலில் நான்கு கனடியர்கள் காணாமல் போயுள்ளனர்!

இஸ்ரேலில் காணாமல் போன கனடியர்களின் எண்ணிக்கை நான்கு என கனடிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களின் அடையாளத்தை அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.

ஆனால் 70 வயதான Judih Weinstein Haggai, 22 வயதான Shir Georgy, Tifferet Lapidot, 74 வயதான Vivian Silver ஆகிய கனடியர்கள் இஸ்ரேலில் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

70 வயதான Judih Weinstein Haggai

கடந்த வார இறுதியில் ஹமாஸ் போராளிகளால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அவர்கள் காணாமல் போயுள்ளனர்

இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதல்களின் போது இவர்கள் ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதியாக சிறை பிடிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது

22 வயதான Shir Georgy

இதுவரை, இஸ்ரேலில் மூன்று கனேடியர்களின் மரணத்தை கனடிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் காணாமல் போன நான்கு கனேடியர்கள் ஹமாஸால் பிணைக் கைதியாக சிறை பிடிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து கனடிய அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.

74 வயதான Vivian Silver

இஸ்ரேலில் பலியான கனடியர்கள் Ottawa நகரை சேர்ந்த 33 வயதான Adi Vital-Kaploun, Montreal நகரை சேர்ந்த 33 வயதான Alexandre Look, Vancouver நகரை சேர்ந்த  24 வயதான Ben Mizrachi என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

Related posts

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான பிராந்திய அணுகுமுறை சாத்தியமானது: Ontario சுகாதார அமைச்சர்

Gaya Raja

தமிழ் சமூக மைய குடும்ப நன்கொடைத் திட்டம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு கனடா தடை

Leave a Comment