தேசியம்
செய்திகள்

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான பிராந்திய அணுகுமுறை சாத்தியமானது: Ontario சுகாதார அமைச்சர்

Ontarioவில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான பிராந்திய அணுகுமுறை சாத்தியமானது என சுகாதார அமைச்சர் புதன்கிழமை தெரிவித்தார்.

நேரடி கற்றல் மீண்டும் ஆரம்பிக்கும் போது Doug Ford அரசாங்கம் ஒரு பிராந்திய அணுகுமுறையைத் தேர்வு செய்வது சாத்தியமானது என சுகாதார அமைச்சர் Christine Elliott கூறினார். அனைத்து Ontario பாடசாலைகளும் April மாதத்தின் ஆரம்பத்தில் ஒரு வார இடைவெளியைத் தொடர்ந்து தொலைநிலைக் கற்றலுக்கு மாற்றப்பட்டன.

Ontario மாகாணம் மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் கட்டத்தை சில வார காலத்திற்குள் நுழைய திட்டமிட்டுள்ளதோடு, பாடசாலை ஆண்டு முடிவடையும் தருவாயில், மீண்டும் நேரடி கற்றலை ஆரம்பிக்கும் கோரிக்கைகள் அதிகரிக்கின்றன.

மாணவர்கள் மீண்டும் வகுப்பறைக்குத் திரும்புவதற்கான அவசியத்தை மாகாணத்தின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி David Williams வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் நேரடி கல்விகள் ஆரம்பிப்பதற்கு தொற்றுக்களின் எண்ணிக்கைகள் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க போதுமானதாக இருக்க வேண்டும் என அமைச்சர் Elliott சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் மாணவர்களை வகுப்பறைகளுக்கு திருப்பி அனுப்ப அரசாங்கம் முடிவு செய்தால், சில நாட்கள் அறிவிப்பு மூலம் அவர்கள் நேரில் கற்றலை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என புதன்கிழமை Ontarioவின் பல பாடசாலை வாரியங்கள்  தெரிவித்தன.    

Related posts

Ontarioவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் 3,000க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

இலங்கை: சீரழிந்து வரும் பொருளாதாரம் – உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா கவலை

Quebec மாகாண Liberal கட்சியின் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!