தேசியம்
செய்திகள்

281 கனடியர்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றம்!

281 கனடியர்கள் இரண்டு விமானங்களில் இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இரண்டு கனேடிய ஆயுதப் படை விமானங்கள் வியாழக்கிழமை (12) இஸ்ரேலில் இருந்து 281 கனேடியர்கள், அவர்களது குடும்பத்தினரை வெளியேற்றியது.

எதிர்வரும் நாட்களில் மேலதிக விமானங்கள் இஸ்ரேலில் இருந்து கனடியர்களை வெளியேற்ற கனடிய அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.

“உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கனேடியர்கள் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாகும்”  என பிரதமர் Justin Trudeau இந்த வெளியேற்றம் குறித்து தெரிவித்தார்.

தேவை இருக்கும் வரை இந்த விமான சேவைகள் தொடரும் என கனடிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair கூறினார்.

128 பயணிகளுடன் முதல் விமானம் வியாழன் பிற்பகல் Tel Aviv நகரில் இருந்து புறப்பட்டது.

158 பயணிகளுடன் இரண்டாவது விமானம் வியாழன் இரவு Tel Aviv நகரில் இருந்து புறப்பட்டது.

இந்த இரண்டு விமானங்களும் Greece நாட்டின் Athens நகரில் தரையிறங்கியதை கனடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இவர்கள் அங்கிருந்து, Air கனடா விமானத்தில் கனடாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

வெள்ளிக்கிழமை (13) மாலை ஒரு விமானம் Athens நகரில் இருந்து Toronto நோக்கி பயணிக்கும் என கனடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

மொத்தம் 5,700 கனடியர்கள் இஸ்ரேலில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 1,600 கனடியர்கள் அங்கிருந்து வெளியேற அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளனர்.

வெள்ளி, சனிக்கிழமைகளில் அதற்கு அப்பாலும் இந்த விமான பயணங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் உயர்ந்த எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

மெக்சிகோ சென்றடைந்தார் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

சிரிய தடுப்பு முகாம்களில் உள்ள கனேடியர்களை விசாரிக்கும் RCMP

Lankathas Pathmanathan

Leave a Comment