இஸ்ரேல், காசா பகுதியில் மூன்று கனடியர்கள் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இரண்டு கனேடிய பிரஜைகள் இஸ்ரேலில் உயிரிழந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly புதன்கிழமை (11) உறுதிப்படுத்தினார்.
மூன்றாவது கனடியரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
மூன்று கனடியர்கள் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக அமைச்சர் Melanie Joly கூறினார்.
ஹமாஸின் தாக்குதல்களை கண்டித்துள்ள வெளிவிவகார அமைச்சர், தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர அழைப்பு விடுத்துள்ளார்.
கனடியர்கள் எவரும் பணயக் கைதிகளாக உள்ளனரா என்பதை அவர் உறுதிப்படுத்த மறுத்துள்ளார்
பலியான இரண்டு கனடியர்களின் விவரங்கள் அவர்களின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
Vancouver நகரை சேர்ந்த 24 வயதான Ben Mizrachi, Montreal நகரை சேர்ந்த 33 வயதான Alexandre Look ஆகியோர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.