Ontario Greenbelt ஊழல் தொடர்பாக RCMP விசாரணையை ஆரம்பித்துள்ளது
Greenbeltடின் சில பகுதிகளை அபிவிருத்திக்காக அனுமதிக்கும் முடிவை RCMP விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையை RCMP பேச்சாளர் செவ்வாய்க்கிழமை (10) உறுதிப்படுத்தினார்.
RCMP Ontario பிரிவின் உணர்திறன், சர்வதேச விசாரணைப் பிரிவால் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.’
இந்த விசாரணை குற்றவியல் தன்மை கொண்டதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
இந்த விசாரணையை RCMPயிடன் Ontario மாகாண காவல்துறையினர் கடந்த August மாதம் பரிந்துரைத்தனர்
Greenbelt மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த தனது அரசாங்கத்தின் முடிவை “ஒரு தவறு” என Ontario முதல்வர் Doug Ford கடந்த மாதம் ஏற்றுக் கொண்டார்.
புதிய வீடுகளின் கட்டுமானத்திற்கு Greenbeltடைத் திறப்பதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை மாற்றியமைப்பதாக முதல்வர் கூறினார்.
Greenbelt குறித்த சர்ச்சையை அடுத்து இரண்டு அமைச்சர்கள் Doug Ford அமைச்சரவையிலிருந்து பதவி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.