December 12, 2024
தேசியம்
செய்திகள்

மூன்று GM தொழிற்சாலைகளில் மறியல் போராட்டம்

General Motors கனடா நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளத் தவறிய நிலையில் Unifor தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

Ontarioவில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் GM தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Oshawa, St. Catharines, Woodstock ஆகிய GM தொழிற்சாலைகளில் இந்த  மறியல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 4,280 வாகனத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Ford கனடாவுடன் காணப்பட்ட ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்த General Motors மறுத்துள்ளதாக  Unifor தலைவர் Lana Payne  செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Unifor தொழிற்சங்கத்துடன் இணைந்து கூட்டு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தொடர்ந்து பணியாற்ற General Motors உறுதி பூண்டுள்ளது.

Related posts

தடுப்பூசி செயல்பாடுகளின் புதிய துணைத் தலைவராக Brigadier General Krista Brodie நியமனம்

Gaya Raja

100 மில்லியன் தடுப்பூசிகளை கனடா வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும்

Gaya Raja

ஈரானில் உள்ள கனடியர்களை நாடு திரும்ப வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment