தேசியம்
செய்திகள்

B.C. விமான விபத்தில் மூவர் பலி

British Colombiaவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

Chilliwack, British Colombiaவில் இந்த விபத்து வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Chilliwack நகராட்சி விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பலியானவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதில் வேறு எவரும் காயமடையவில்லை என RCMP கூறியது.

விசாரணைகள் தொடரும் நிலையில் விபத்துக்கான காரணம் குறித்த எந்த விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

Related posts

இளம் குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படலாம்

Lankathas Pathmanathan

SHN வைத்தியசாலைகளில் இரண்டு பிரதான பொறுப்புகளில் தமிழர்கள் நியமனம்

Lankathas Pathmanathan

Walmart வெதுப்பகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் ஊழியர் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

Leave a Comment