Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைகிறது.
GTA முழுவதும் எரிபொருளின் விலை வியாழக்கிழமை (05) நள்ளிரவில் லிட்டருக்கு சுமார் ஆறு சதங்கள் குறைகிறது.
இதன் மூலம் எரிபொருளின் விலை சராசரியாக லிட்டருக்கு 149.9 சதமாக விற்பனையாகும்.
Torontoவில் எரிபொருளின் விலை September 15ஆம் திகதி ஒரு வருடத்தில் இல்லாத உச்ச நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது.