புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கு ஆணை கடிதங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என தெரியவருகிறது.
அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகும் நிலையில் பிரதமர் இதுவரை தனது அமைச்சர்களுக்கு ஆணை கடிதங்கள் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
தனக்கு புதிய ஆணைக் கடிதம் வழங்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சர் Bill Blair கடந்த வாரம் கூறினார்.
பிரதமர் Justin Trudeau கடந்த December 2021 இல் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கிய ஆணையின் அடிப்படையில் தான் தொடர்ந்து செயல்படுவதாக அமைச்சர் Bill Blair தெரிவித்தார்.
புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட பொறுப்புகளில் உள்ள 30 அமைச்சர்களுக்கும் புதிய ஆணைக் கடிதம் வழங்கப்படுமா என்பது குறித்து பிரதமர் அலுவலகத்திடம் கேள்வி எழுப்பட்டுள்ளது.