February 21, 2025
தேசியம்
செய்திகள்

40 மில்லியனை தாண்டிய கனடாவின் மக்கள் தொகை

கடந்த June மாதத்தில் கனடாவின் மக்கள் தொகை 40 மில்லியனை தாண்டியது.

கனடிய புள்ளிவிவர திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தரவு வெளியானது.

கனடா தினமான July 1 இல் கனடாவின் மக்கள் தொகை 40,097,761 ஆக அதிகரித்தது.

இது 2022 July 1 ஆம் திகதி முதல்  2.9 சதவீதம் அதிகரிப்பாகும்

இந்த அதிகரிப்பின் 98 சதவீதம் இடம்பெயர்வு மூலம் நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம் July 2022 முதல் July 2023 வரை கனடா உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது

இந்த காலகட்டத்தில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் முதல் 20 நாடுகளில் கனடாவும் ஒன்றாகும்.

மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஏனைய G7 நாடுகளை விட கனடாவை முன்னிலைப்படுத்துகிறது என புள்ளிவிவர திணைக்களம் கூறியது.

July 1, 2023 நிலவரப்படி, கனடாவில் 2,198,679 நிரந்தரமற்ற குடியிருப்பாளர்கள் உள்ளனர் வசிக்கவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு முந்தைய இதே திகதியில் இருந்து இது 46 சதவீதம் அதிகமாகும்.

Related posts

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறைகளை அரசாங்கம் கண்டிக்கிறது: பிரதமர் Trudeau!

Gaya Raja

தடுப்பூசி போட்ட மாணவர்களுக்கும் – போடாத மாணவர்களுக்கும் தனி விதிகள் இல்லை!

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment