Ontario மாகாண தொழிலாளர் அமைச்சர் (Labour Minister) Monte McNaughton பதவி விலகுகின்றார்.
அரசியலில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அவர் அறிவித்தார்
அரசியலில் இருந்து விலகும் அவர் தனியார் துறைக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
Ontario முதல்வர் Doug Ford அமைச்சரவையில் இருந்து விலகிய மூன்றாவது அமைச்சர் இவராவார்.
தொடரும் Greenbelt மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த சர்ச்சைகளுக்கும் தனது பதவி விலகலுக்கும் தொடர்பு இல்லை என Monte McNaughton கூறினார்.