Ontario மாகாண போக்குவரத்துத்துறை இணையமைச்சராக விஜய் தணிகாசலம் பதவியேற்கிறார்.
Ontario முதல்வர் Doug Ford அமைச்சரவை மாற்றத்தை வெள்ளிக்கிழமை (22) அறிவித்தார்.
ஒரு மாதத்தில் மூன்றாவது அமைச்சர் பதவி விலகிய நிலையில் இந்த அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது.
இந்த மாற்றத்தின் மூலம் ‘Scarborough – Rouge Park தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதுவரை காலமும் அவர் உட்கட்டமைப்பு அமைச்சரின் மாகாணசபை உதவியாளராக செயல்பட்டு வந்தார்.
Doug Ford வெள்ளியன்று பின்வரும் மாற்றங்களை அறிவித்தார்;
David Piccini, தொழிலாளர், குடிவரவு, பயிற்சி, திறன் மேம்பாட்டு (Minister of Labour, Immigration, Training and Skills Development) அமைச்சராகிறார்.
Andrea Khanjin சுற்றுச்சூழல், பாதுகாப்பு, பூங்காக்கள் (Minister of the Environment, Conservation and Parks) அமைச்சராகிறார்;
Todd McCarthy, பொது, வணிக சேவை வழங்கல் (Minister of Public and Business Service Delivery) அமைச்சராகிறார்.
Vijay Thanigasalam, போக்குவரத்துத்துறை இணை (Associate Minister of Transportation) அமைச்சராகிறார்.