தேசியம்
செய்திகள்

Greenbelt திட்டங்கள் குறித்த முடிவு தவறு : Doug Ford

Greenbelt மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த தனது அரசாங்கத்தின் முடிவை “ஒரு தவறு” என Ontario முதல்வர் Doug Ford ஏற்றுக் கொண்டார்.

புதிய வீடுகளின் கட்டுமானத்திற்கு Greenbeltடைத் திறப்பதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை மாற்றியமைப்பதாக முதல்வர் கூறினார்.

வியாழக்கிழமை (21) Niagara Fallsசில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் மாநாட்டில் இந்த முடிவை Doug Ford அறிவித்தார்.

Greenbelt குறித்து வழங்கிய வாக்குறுதியை மீறியதற்காக Doug Ford  மன்னிப்பு கோரியுள்ளார்.

அடுத்த வாரம் மீண்டும் Ontario மாகாண சபை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் Doug Ford தலைமையிலான மாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பு Niagara Fallsசில் நடைபெறுகிறது.

Greenbelt குறித்த சர்ச்சையை அடுத்து இரண்டு அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

Ontario அரசாங்கத்தின் Greenbelt மேம்பாட்டுத் திட்டங்கள் சார்புடையவை என தனது அறிக்கையில் அண்மையில் கணக்காய்வாளர் நாயகம் Bonnie Lysyk பரிந்துரைத்திருந்தார்.

Doug Ford அரசாங்கம் Greenbelt திட்டத்தை கையாண்ட விதம் குறித்து RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Kitchener இல்ல வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Edmontonனில் வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது பதிவு

Lankathas Pathmanathan

கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment