தேசியம்
செய்திகள்

கனேடிய தூதரக அதிகாரி இந்தியாவில் இருந்து வெளியேற்றம்

கனேடிய தூதரக அதிகாரி ஒருவர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடிய பிரதமர் குற்றம் சாட்டிய நிலையில் இந்த முடிவை இந்தியா எடுத்துள்ளது.

சீக்கிய தலைவரின் மரணத்தில் இந்திய முகவர்களை கனடிய அரசாங்கம் தொடர்புபடுத்தியதை அடுத்து, கனேடிய தூதரக அதிகாரியை வெளியேற்ற இந்தியா முடிவு செய்துள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத மூத்த கனேடிய தூதரக அதிகாரி ஒருவர் அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் உள் விவகாரங்களில் கனேடிய தூதர்கள் தலையிடுவது குறித்து இந்திய அரசின் அதிகரித்து வரும் கவலையை இந்த முடிவு பிரதிபலிக்கிறது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (18) இந்தியாவின் வெளிநாட்டு உளவு நிறுவனமான ஆராய்ச்சி, பகுப்பாய்வுப் பிரிவின் (Research and Analysis Wing – RAW) கனேடிய நடவடிக்கைகளின் தலைவராக இருந்த Pavan Kumar Rai கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

Related posts

ஹமாசுடன் தொடர்புடைய உதவிக் குழுவின் முன்னாள் ஊழியருக்கு நாடு கடத்தல் உத்தரவு

Lankathas Pathmanathan

பிணைப்பு நடுவர் மன்றத்திற்கு ஈரானுக்கு அழைப்பு விடுக்கும் கனடா

Lankathas Pathmanathan

கனடாவில் தமிழ் இனப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment