இந்தியாவில் சிக்கியுள்ள பிரதமர் Justin Trudeau, கனேடிய தூதுக்குழுவை அழைத்து வருவதற்காக விமானம் ஒன்று இந்தியா நோக்கி பயணிக்கின்றது.
G20 மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் இந்தியா பயணித்த பிரதமர் Justin Trudeauவின் விமானம் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் பிரதமரும், கனடிய தூதுக்குழுவும் இந்தியாவில் தங்க வேண்டிய கட்டாயம் தோன்றியது.
இந்த நிலையில் பிரதமரையும் தூதுக்குழுவை அழைத்து வர இரண்டாவது விமானம்
ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இந்தியா நோக்கி பயணிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இந்த விமானம் ஞாயிறு இரவு 8 மணியளவில் CFB Trenton விமானப்படை தளத்தில் இருந்து பயணித்தது.
திங்கட்கிழமை (11) அதிகாலை இங்கிலாந்தில் தரையிறங்கிய இந்த விமானம் மீண்டும் அங்கிருந்து இந்தியாவின் தலைநகர் புதுடில்லி நோக்கி பயணிக்கிறது.
பிரதமரையும் கனடிய தூது குழுவினரையும் அழைத்துக் கொண்டு இந்த விமானம் செவ்வாய்கிழமை (12) காலை மீண்டும் புறப்படுவதை நோக்காகக் கொண்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
G20 மாநாட்டைத் தொடர்ந்து பிரதமர் ஞாயிற்றுக்கிழமை இரவு புதுடில்லியில் இருந்து பயணிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.