தேசியம்
செய்திகள்

Scarborough கத்திக் குத்தில் 12 வயது சிறுமி பலி! சகோதரர் கைது?

Scarboroughவில் கத்தியால் குத்தப்பட்ட 12 வயது சிறுமி பலியானார்.

செவ்வாய்க்கிழமை (05) தொடர் மாடி கட்டிடம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

தொடர்மாடி கட்டிட இல்லமொன்றில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு இளைஞர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றம் சாட்டப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

கைதானவர் பலியான சிறுமியின் சகோதரர் என தெரியவருகிறது.

ஆனாலும் இந்த தகவலை காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் சம்பவ இடத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் முன்னர் தெரிவித்திருந்தனர்.

பலியானவர் இதுவரை காவல்துறையினரால் முறையாக அடையாளம் காணப்படவில்லை.

Related posts

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக $10.5 மில்லியன் பெறும் கனடிய அணி

Lankathas Pathmanathan

கனடாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு நாளாந்தம் தடுப்பூசி வழங்கல்!

Gaya Raja

தைவான் நில நடுக்கத்தில் காணாமல் போன கனடியர் மீட்கப்பட்டார்

Lankathas Pathmanathan

Leave a Comment