வட்டி விகிதத்தில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என மத்திய வங்கி அறிவித்தது.
வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் நிலையாக வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது
பொருளாதாரம் மந்தமாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடியை புதன்கிழமை (06) மத்திய வங்கி அறிவித்தது.
ஆனாலும் எதிர்காலத்தில் மேலும் வட்டி விகித உயர்வு குறித்து மத்திய வங்கி கருத்து தெரிவிக்கவில்லை.
July மாத நடுப்பகுதியில் மத்திய வங்கி ஒரு வட்டி விகித அதிகரிப்பை அறிவித்தது.
அந்நேரம் அறிவிக்கப்பட்ட 25 அடிப்படை புள்ளிகள் உயர்வு, வட்டி விகிதத்தை 5 சதவீதமாக அதிகரித்தது.