Toronto போக்குவரத்து சபையின் மூன்றாவது புகையிரத பாதையான Scarborough RT நிரந்தரமாக மூடப்படுகிறது.
Toronto போக்குவரத்து சபை வியாழக்கிழமை (24) இந்த அறிவித்தலை வெளியிட்டது.
Scarborough RT கடந்த மாதம் தடம் புரண்ட நிலையில் இந்த புகையிரத பாதை நிரந்தரமாக மூடப்படுவதாக TTC அறிவித்தது.
முதலில் November 18ஆம் திகதி முடிவடைய இருந்த புகையிரத சேவை நிறுத்தப்படுவதாக வியாழனன்று TTC அறிவித்தது.
July 24ஆம் திகதி தெற்கு நோக்கி பயணித்த புகையிரதம், Ellesmere புகையிரத நிலையத்திற்கு அருகே தடம் புரண்டது.
இந்த சம்பவத்தில் 5 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் இந்த விரைவு போக்குவரத்து புகையிரத சேவை செயல்படவில்லை.