தேசியம்
செய்திகள்

நிறைவுக்கு வந்தது Liberal அமைச்சரவை சந்திப்பு

Prince Edward தீவில் நடைபெற்ற Liberal அமைச்சரவை சந்திப்பு நிறைவுக்கு வந்தது.

பிரதமர் Justin Trudeau தலைமையிலான Liberal அமைச்சரவை இந்த வாரம் Prince Edward தீவின் தலை நகரில் கூடியது.

பிரதமர் தனது அமைச்சர்களின் சந்திப்பை புதன்கிழமை (23) முடித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்திற்கு தயாராகும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அமைச்சர்கள் தங்கள் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

இந்த சந்திப்பின் நிறைவில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இளைஞர்களை நோக்கிய செய்தியை பிரதமர் வெளியிட்டார்.

நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் September மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

British Columbiaவிற்கு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

NBA வெற்றிக் கிண்ணத்திற்கான தொடரின் முதலாவது ஆட்டத்தில் Toronto Raptors அணி

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் தமிழர்!

Lankathas Pathmanathan

Leave a Comment