தேசியம்
செய்திகள்

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடா முழுவதும் COVID தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.

பெரும்பாலான COVID தொற்றுகள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து August மாத ஆரம்பம் வரை மெதுவாகக் குறைந்திருந்தன.

ஆனாலும் கனடா முழுவதும் COVID தொற்றின் புதிய அலையை பரிந்துரைக்கும் ஆரம்ப அறிகுறிகள் கடந்த சில வாரங்களாக தோன்றியுள்ளன.

இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், COVID தொடர்பான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக August மாதம் 15ஆம் திகதி கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில் ஒரு புதிய COVID அலை முந்தைய அலைகளிலிருந்து எவ்வாறு வேறுபடலாம் என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Related posts

TTC streetcar தடம் புரண்டதில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

Greenbelt ஊழல் தொடர்பான RCMP விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

வெள்ளப் பேரழிவை எதிர்கொள்ளும் பாகிஸ்தானுக்கு கனடா 5 மில்லியன் டொலர் நிதியுதவி

Lankathas Pathmanathan

Leave a Comment