தேசியம்
செய்திகள்

காட்டுத் தீயை எதிர்த்துப் போராட உதவும் கனேடிய ஆயுதப் படையினர்

Alberta, Northwest Territories பிரதேசங்களில் தொடரும் காட்டுத் தீயை எதிர்த்துப் போராட கனேடிய ஆயுதப் படையினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தீயணைப்பு முயற்சிகள், விமான போக்குவரத்து, திட்டமிடல், ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விடயங்களில் கனேடிய ஆயுதப் படையினர் உதவுவார்கள் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair தெரிவித்தார்.

காட்டுத்தீ அப்பகுதியில் உள்ள பல சமூகங்களை தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது.

அவற்றில் பல பகுதிகள் வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் உள்ளன.

அதிகரித்த காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக, Northwest பிரதேசங்களுக்கும் Albertaவிற்கும் இடையிலான எல்லையில் உள்ள பல சமூகங்களில் வெளியேற்ற உத்தரவு அமுலில் உள்ளது.

Northwest பிரதேசத்தின் Fort Smith கடந்த சனிக்கிழமை உள்ளூர் அவசரகால நிலையை அறிவித்தது

அந்த நகரத்தின் குடியிருப்பாளர்கள் அமைதியான முறையில் வெளியேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்

காட்டுத்தீயை எதிர்த்துப் போராடுவதில் எதிர்கொள்ளும் பெருகிய சிரமம் காரணமாக, மாகாண, பிராந்திய அரசாங்கங்கள் மத்திய அரசின் உதவி கோரிய நிலையில் கனேடிய ஆயுதப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காட்டுத்தீ கனடாவின் சில வடக்கு சமூகங்களை நெருங்கும் நிலையில் கனேடிய ஆயுதப் படையினர் உதவ தயாராக உள்ளனர் என அவசரகால தயார்நிலை அமைச்சர் Harjit Sajjan கூறினார்.

Related posts

பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கனடியர் பிரித்தானியாவில் கைது

Lankathas Pathmanathan

Influenza காரணமாக கடந்த மாதம் British Colombiaவில் ஐந்து குழந்தைகள் மரணம்

Lankathas Pathmanathan

தமிழ் கனடிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment