தேசியம்
செய்திகள்

Toronto நகரசபை இடை தேர்தலில் தமிழர்!

Toronto நகர சபைக்கான இடை தேர்தலில் தமிழர் ஒருவர் வேட்பாளராகின்றார்.

Toronto நகர சபையில் வெற்றிடமாக உள்ள Scarborough Southwest தொகுதியில் விரைவில் இடை தேர்தல் நடைபெறவுள்ளது

Scarborough Southwest தொகுதி நகரசபை உறுப்பினர் இருக்கையை வெற்றிடமாக உள்ளதாக அறிவிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக நகரசபை உறுப்பினர்கள் வியாழக்கிழமை (10) வாக்களித்தனர்

நகரசபை உறுப்பினர் Paul Ainslie இந்த பிரேரணையை முன்வைத்தார்.

September 6ம் திகதி, Scarborough Southwest இடை தேர்தல் நடத்த வேண்டும் என்ற சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, அது மாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும்.

இந்த இடை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மறுநாள் ஆரம்பமாகும்.

இடை தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை.

Scarborough Southwest தொகுதிக்கான நகரசபை உறுப்பினர் இருக்கை July 26ஆம் திகதி வெற்றிடமானது.

இந்த தொகுதியில் நீண்ட கால நகர சபை உறுப்பினராக இருந்த Gary Crawford தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்தார்.

Scarborough-Guildwood தொகுதியில் நடைபெற்ற மாகாண சபை இடைத் தேர்தலில் Progressive Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு Gary Crawford தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்

இந்த இடை தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் Scarborough Southwest தொகுதிக்கான இடை தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை தமிழரான பார்த்தி கந்தவேள் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இடை தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை அவர் தனது சமூக வலைத்தளம் மூலம் வெளிப்படுத்தினார்.

பார்த்தி கந்தவேள், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த தொகுதியின் கல்வி சபை உறுப்பினராக வெற்றி பெற்றார்.

இவர் கடந்த நகரசபை தேர்தலில் Scarborough Southwest தொகுதியின் நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் விஜய் தணிகாசலம்

Lankathas Pathmanathan

கனடாவுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பவுள்ள அமெரிக்கா

Gaya Raja

 November மாதத்தில் வீடு விற்பனை குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment