Toronto பூங்காவில் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.இதில் 9 பேர் காயமடைந்தனர்.
Earlscourt பூங்காவில் சனிக்கிழமை (05) காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஒரு கலாச்சார நிகழ்வின் போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர்.
ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதில் 9 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Toronto மேற்கில் அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு செல்வதை தவிர்க்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
பூங்காவில் ஒரு நிகழ்வு நடைபெற்றதாக கூறும் புலனாய்வாளர்கள் அங்கு இந்த நிகழ்வின் எதிர்ப்பாளர்கள் சென்றபோது வன்முறை ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் 8 பேர் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.