கனடிய வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் மீண்டும் அதிகரித்தது.
July மாதம் வேலையற்றோர் விகிதம் 5.5 சதவீதமாக அதிகரித்தது.
கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (04) இந்த தகவலை வெளியிட்டது.
July மாதம் 6,400 தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்டதாக புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது.
கனடிய மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வேலையற்றோர் விகிதம் அதிகரிக்கிறது.
July மாதத்தில் வேலையற்றோர் விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதம் அதிகரித்துள்ளது.
மாகாண ரீதியில் July மாத வேலையற்றோர் விகிதம:
Newfoundland and Labrador 8.7 சதவீதம்
Prince Edward Island 8.1 சதவீதம்
Nova Scotia 7.7 சதவீதம்
New Brunswick 6.2 சதவீதம்
Quebec 4.5 சதவீதம்
Ontario 5.6 சதவீதம்
Manitoba 4.9 சதவீதம்
Saskatchewan 5.1 சதவீதம்
Alberta 6.1 சதவீதம்
British Columbia 5.4 சதவீதம்