தேசியம்
செய்திகள்

இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் காணொளி குறித்து காவல்துறை விசாரணை

கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் இணையத்தில் வெளியான காணொளி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர்.

கனடாவில் உள்ள அனைத்து இராஜதந்திரிகளின் பாதுகாப்பையும் கனடிய அரசாங்கம் உறுதி செய்யும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனாலும் இந்த அச்சுறுத்தல் குறித்த விபரங்கள் எதனையும்அமைச்சு வெளியிடவில்லை.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை விபரங்களை RCMP மூலம் அறிந்து கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

ஆனாலும் இந்த விடயத்தில் குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த RCMP மறுத்துள்ளது.

Ottawa வில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த அச்சுறுத்தல் குறித்து கருத்துத் தெரிவிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை.

Related posts

ஏழு மாதங்களில் முதல் முறையாக அதிகரித்த வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

சீனாவில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கனேடியர் !

Gaya Raja

Quebecகின் இரவு நேர ஊரடங்கு விரைவில் நீக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment