தேசியம்
செய்திகள்

ஏழு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்!

பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (26) அமைச்சரவையில் மாற்றங்களை அறிவித்தார்.

மிகப்பெரிய அமைச்சரவை மாற்றமாக இது அமைந்தது.

இதில் அநேகமாக அனைத்து அமைச்சு பதவிக்கும் புதியவர்கள் அறிவிக்கப்பட்டனர்

இந்த மாற்றத்தின் மூலம் முதல் இலங்கை தமிழ் அமைச்சர், இஸ்மாயில் அமைச்சர், பிலிப்பைன்ஸ் அமைச்சர் ஆகியோர் பதவி ஏற்றனர்.

ஏழு அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து விலகிய நிலையில் ஏழு புதியவர்களுக்கு அமைச்சசு பதவி வழங்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, நீதி அமைச்சர் David Lametti, கருவூல வாரிய தலைவர் Mona Fortier ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விலகினர்.

போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra, மீன்வளம், கடல்சார் அமைச்சர் Joyce Murray, பொது சேவைகள், கொள்முதல் அமைச்சர் Helena Jaczek, மனநலத்துறை அமைச்சர் Carolyn Bennett ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்ததுள்ளனர்.

இதனால் இந்த அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக அவர்களுக்கும் புதிய அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை

அமைச்சரவையில் பின்வரும் புதிய உறுப்பினர்களையும் பிரதமர் வரவேற்றார்.

ஹரி ஆனந்தசங்கரி, முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சராகிறார்.

Terry Beech குடிமக்கள் சேவை அமைச்சராகிறார்.

Soraya Martinez Ferrada சுற்றுலாத்துறை அமைச்சராகிறார்.

Ya’ara Saks மனநலத்துறை அமைச்சராகிறார்.

Jenna Sudds குடும்பங்கள், குழந்தைகள், சமூக மேம்பாட்டு அமைச்சராகிறார்.

Rechie Valdez சிறு வணிக அமைச்சராகிறார்.

Arif Virani நீதி அமைச்சராகிறார்.

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland, புத்தாக்கம், அறிவியல், தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne, வெளியுறவு அமைச்சர் Melanie Joly, சுற்றுச்சூழல் அமைச்சர் Steven Guilbeault ஆகியோர் தொடர்ந்தும் தமது அமைச்சு பதவிகளை பெற்றுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், கருவூல வாரிய தலைமை பொறுப்பேற்றார்

Bill Blair புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்றார்.

இந்த அமைச்சரவை மாற்றம் காரணமான பதவி பிரமாணம் புதன்கிழமை ஆளுநர் நாயகத்தின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெற்றது

Related posts

சீனாவுடனான உறவுகள் தொடர்பாக வேட்பாளர் ஒருவரை தவிர்க்குமாறு Liberal கட்சியை CSIS எச்சரித்தது?

Lankathas Pathmanathan

கோடை காலத்தின் வெப்பமான நாட்கள் இதுவரை உணரப்படவில்லை: சுற்றுச்சூழல் கனடா

பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் விவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment