தேசியம்
செய்திகள்

சீன அரசாங்கத்திற்கு உதவிய குற்றங்களுக்காக ஓய்வுபெற்ற RCMP அதிகாரி கைது

வெளிநாட்டு தலையீடு வழக்கில் ஓய்வுபெற்ற RCMP அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சீன அரசாங்கத்திற்கு உதவிய குற்றங்களுக்காக RCMP தனது ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளது.

60 வயதான William Majcher என்ற ஓய்வு பெற்ற RCMP அதிகாரி கைதாகியுள்ளார்.

வியாழக்கிழமை (20) Vancouverரில் கைதான அவர், வெள்ளிக்கிழமை (21) இணைய வழிமூலமாக Quebec நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

கனேடியர் ஒருவரை சட்டவிரோதமாக பயமுறுத்தும் சீன அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் RCMPயை விட்டு வெளியேறிய சில ஆண்டுகளின் பின்னர் சீன அரசாங்கத்திற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சீன அரசுக்கு பயனளிக்கும் வகையில் தனது உளவுத்துறை தொடர்புகளை அவர் உபயோகித்ததாக வெள்ளியன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் RCMP தெரிவித்துள்ளது.

இந்த வெளிநாட்டு தலையீடு தேர்தல் அல்லது அரசியல் தொடர்பு பட்டது அல்ல என RCMP செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

2021 இலையுதிர்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்க குழுவின் விசாரணையை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related posts

B.C. பேருந்து விபத்தில் 18 பேர் காயம்

Lankathas Pathmanathan

$70 மில்லியன் Lotto Max அதிஷ்டலாப சீட்டு Albertaவில் கொள்வனவு

Lankathas Pathmanathan

அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment