காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி வடமேற்கு Albertaவில் விபத்துக்குள்ளானது.
போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த குறித்து தகவல் வெளியிட்டது
இந்த உலங்குவானூர்தியின் விமானி இந்த விபத்தில் மரணமடைந்தார்.
இந்த விபத்து Albertaவின் Peace Riverரில் புதன்கிழமை (19) மாலை நிகழ்ந்தது.
இந்த விபத்து குறித்து விசாரிக்க இரண்டு போக்குவரத்து பாதுகாப்பு வாரிய புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
41 வயதான விமானி, இந்த விபத்தில் ஏற்பட்ட காயங்களால் இறந்தார் என RCMP உறுதிப்படுத்தியது.
இந்த விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த Aberta முதல்வர் Danielle Smith, பலியான விமானியின் குடும்பம், நண்பர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (20) காலை வரை Albertaவில் 117 காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
இவற்றில் 17 கட்டுப்பாட்டை இழந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.