பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உள்கட்டமைப்பை மேம்படுத்துமாறு கனடிய மத்திய அரசாங்கத்தை மாகாண முதல்வர்கள் வலியுறுத்துகின்றனர்.
Winnipegகில் நடைபெற்ற முதல்வர்களின் வருடாந்த மூன்று நாள் மாநாடு புதன்கிழமை (12) முடிவடைந்தது.
மத்திய அரசாங்கம் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் ஆகியவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதனன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர்கள் கோரினர்.
அதேவேளை உள்கட்டமைப்பு முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க பிரதமருடன் பிரத்தியேக சந்திப்பை முதல்வர்கள் கோரியுள்ளதாக Manitoba முதல்வர் Heather Stefanson தெரிவித்தார்.
மாகாணங்கள் இணைந்து சேவையாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், மத்திய அரசாங்கம் ஒவ்வொரு மாகாணத்தின் தனிப்பட்ட அதிகார வரம்புகளை மதிக்க வேண்டும் எனவும் கூறினார்.
தேசிய பொருளாதார வர்த்தக வழித்தடங்கள் உட்பட, சமூகங்கள், அதிகார வரம்புகளுக்கு இடையே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இலக்கில் மாகாணங்கள் ஒன்றுபட்டுள்ளன எனவும் Manitoba முதல்வர் தெரிவித்தார்.