தேசியம்
செய்திகள்

Toronto நகரின் புதிய முதல்வராக பதவியேற்ற Olivia Chow

Toronto நகரின் 66ஆவது முதல்வராக Olivia Chow புதன்கிழமை (12) பதவியேற்றார்.

புதனன்று Toronto நகர சபையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போது Olivia Chow அதிகாரப்பூர்வமாக Toronto நகர முதல்வராக பதவியேற்றார்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு வாரங்களுக்கு பின்னர் Olivia Chow நகர முதல்வராக புதன்கிழமை பதவியேற்றார்.

66 வயதான அவர், Toronto நகரத்தை வழிநடத்தும் முதல் சிறுபான்மை நபர் ஆவார்.

Toronto நகரம் ஒன்றிணைந்த பின்னர் நகரத்தை வழிநடத்தும் முதல் பெண் இவராவார்.

இந்த தேர்தலில் 37 சதவீதம் வரையிலான வாக்குகளை Olivia Chow, 32 சதவீதமான வாக்குகளை Ana Bailao பெற்றனர்.

இந்த தேர்தலில் 2 இலட்சத்து 69 ஆயிரத்து 372 வாக்குகளை Olivia Chow பெற்றார்.

Related posts

2024 Paris Olympics: நான்காவது வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா

Lankathas Pathmanathan

Ontarioவில் கடந்த வருடம் 100,000 டொலர்களுக்கு அதிகமான ஊதியம் பெற்றவர்களின் பட்டியல் வெளியானது!

Lankathas Pathmanathan

20 -30 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கும் தொற்றின் மூன்றாவது அலை!

Gaya Raja

Leave a Comment