தேசியம்
செய்திகள்

சுகாதாரப் பாதுகாப்பில் மாகாணங்களுக்கு மத்திய அரசு உதவ முடியும்!

சிறந்த சர்வதேச ஆட்சேர்ப்பு மூலம் சுகாதாரப் பாதுகாப்பில் கனடிய அரசாங்கம் உதவ முடியும் என மாகாண முதல்வர்கள் தெரிவித்தனர் .

மாகாண முதல்வர்கள் வருடாந்த மாநாடு செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமானது.

இந்த மூன்று நாள் மாநாட்டில் சுகாதாரப் பாதுகாப்பு முக்கிய கவனம் பெறுகிறது.

வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இந்த விடயத்தில் மத்திய அரசு உதவ முடியும் என செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய Alberta முதல்வர் Danielle Smith கூறினார்.

சுகாதாரப் பணியாளர்கள் மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி பணிமாற்றம் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்த Ottawa உதவக்கூடும் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் தனது மாகாணத்தின் மிகப்பெரிய சவால் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை என British Columbia முதல்வர் David Eby தெரிவித்தார்.

Related posts

Mississauga விபத்தில் காயமடைந்த தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் Halifax நகரில் 21 பேர் கைது

Lankathas Pathmanathan

தொற்றின் பரவல் அதிகமாக உள்ள நாடுகளின் விமானங்களை கனடா நிறுத்த வேண்டும் – தொடரும் கோரிக்கைகள்!

Gaya Raja

Leave a Comment