இலையுதிர் காலத்தில் மற்றொரு COVID booster தடுப்பூசியை பெற கனடாவின் நோய் தடுப்பு குழு பரிந்துரைக்கிறது.
NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை (11) இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
கனேடியர்கள் தங்கள் கடைசி தடுப்பூசியை பெற்று அல்லது COVID தொற்றுக்குள்ளாகி குறைந்தது ஆறு மாதங்கள் ஆகியிருந்தால் இலையுதிர் காலத்தில் மற்றொரு booster தடுப்பூசியை பெற வேண்டும் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்படுகிறது.
தகுதியுடையவர்கள் COVID தடுப்பூசியின் புதிய வடிவத்தை பெற NACI அறிவுறுத்துகிறது.