தேசியம்
செய்திகள்

Torontoவில் அதிகரிக்கும் வன்முறை குறித்து Olivia Chow கவலை

Torontoவில் அண்மை காலத்தில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என புதிய நகர முதல்வர் Olivia Chow தெரிவித்தார்.

அண்மைக்காலத்தில் Toronto நகரில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து பல மட்டங்களில் அதிர்ச்சி தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை (10) அதிகாலை Torontoவில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.

இதில் 20 வயதுடைய ஒரு ஆணும், பெண் ஆகியோர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (07) Leslieville பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரணமடைந்தார்.

வியாழக்கிழமை (06) Eglinton சுரங்க புகையிரத நிலையத்திற்கு அருகில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகரிக்கும் இந்த வன்முறைகள் குறித்து Olivia Chow கவலை தெரிவித்தார்.

இந்த வன்முறைகளை நிறுத்துவது நகர முதல்வராக தனது முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என அவர் கூறினார்.

Related posts

தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

Lankathas Pathmanathan

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டம்!

Lankathas Pathmanathan

Bill 124 சட்டத்தை இரத்து செய்த Ontario அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment