கனடிய மத்திய வங்கி அடுத்த வாரம் மீண்டும் ஒரு வட்டி விகித அதிகரிப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் வேலையற்றோர் விகிதம் அதிகரித்த நிலையிலும் வட்டி விகித உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் புதன்கிழமை (12) இந்த வட்டி விகித அறிவிப்பு வெளியாகிறது.
மத்திய வங்கி June மாதத்தில் வட்டி விகித அதிகரிப்பை இடை நிறுத்த முடிவு செய்தது.
எதிர்கால வட்டி விகித முடிவுகள் பொருளாதார தரவுகளின் அடிப்படையில் அமையும் என மத்திய வங்கி கூறியிருந்தது.
இறுதியாக அறிவிக்கப்பட்ட கால் சதவீத வட்டி விகித உயர்வு அதன் முக்கிய விகிதத்தை 4.75 சதவீதமாக்கியது.
இது 2001ஆம் ஆண்டிற்குப் பின்னரான அதிகபட்ச வட்டி விகிதமாகும்.
இந்த நிலையில் புதன்கிழமை மீண்டும் கால் சதவீத உயர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது.