ரஷ்யா- உக்ரைன் போரில் கொத்துக் குண்டுகளின் பயன்பாட்டை கனடா கண்டிக்கிறது.
உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை அனுப்பும் அமெரிக்காவின் முடிவு வெள்ளிக்கிழமை (07) அறிவிக்கப்பட்ட நிலையில் கனடிய அரசின் இந்த கண்டனம் வெளியானது.
கொத்துக் குண்டுகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்க நிர்வாகம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த குண்டுகளை பயன்படுத்துவதற்கு எதிரான தனது நிலைப்பாட்டை கனடா மீண்டும் வலியுறுத்தியது.
கண்ணி வெடிகளுக்கு எதிரான கனடாவின் தடைக்கு அமைவாக அதன் பயன்பாட்டிற்கு கனடா முற்றிலும் எதிரானது என்ற நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்துகிறது என கனடிய அரசாங்கம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1997 இல், கனடா Ottawa ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த ஒப்பந்தம் கொத்துக் குண்டுகளின் பயன்பாட்டை தடை செய்கிறது.