தேசியம்
செய்திகள்

Torontoவில் மீண்டும் அதிகரிக்கும் வன்முறை?

Toronto நகரில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து அதிர்ச்சி தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (07) மதியம் Leslieville பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரணமடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

24 மணி நேரத்தில் Torontoவில் நிகழ்ந்த இரண்டாவது வன்முறை சம்பவம் இதுவாகும்.

வியாழக்கிழமை (06) Toronto சுரங்கப்பாதை ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

Eglinton சுரங்க புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த கத்திக் குத்து சம்பவம் நிகழ்ந்தது.

இதில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த குற்றச் சாட்டில் 25 வயதான Moses Lewin என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை ஒரு கொலை முயற்சியாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Toronto போக்குவரத்து சேவையில் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் கவலை கொண்டுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் கூறினார்.

Related posts

Quebecகில் சுகாதாரப் பணியாளர்களும் சமூக சேவை தொழிலாளர்களும் தடுப்பூசி பெறுவதற்கு காலக்கெடு!

Gaya Raja

புதிய தனிமைப்படுத்தல் விதி விலக்கிலிருந்து கனேடியர்களை விலக்கும் நாடுகள்!

Gaya Raja

Calgary வெடிப்பில் குறைந்தது 10 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment