Facebook, Instagram தளங்களில் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தி வைக்க கனடிய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் பாரம்பரிய அமைச்சர் Pablo Rodriguez புதன்கிழமை (05) இந்த முடிவை அறிவித்தார்.
கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து விலத்தும் பொறுப்பற்ற முடிவை அடுத்து இந்த நகர்வை
மத்திய அரசாங்கம் எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து நீக்குவதாக கடந்த வாரம் Meta, Google நிறுவனங்கள் அறிவித்தன.
Liberal அரசாங்கத்தின் இணைய செய்தி சட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Bill C-18 எனப்படும் மத்திய அரசின் இணைய செய்தி சட்டம், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் Google, Meta போன்ற நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு பணம் செலுத்த கட்டாயப்படுத்துகிறது.