தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்து நம்பிக்கை: NDP தலைவர்

கனடிய பொது தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக NDP தலைவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு தலையீடு குறித்து மத்திய அரசு பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த விடயம் குறித்த உரையாடல்கள் வெவ்வேறு தரப்பினரிடையே தொடரும் நிலையில் NDP தலைவர் Jagmeet Singh செவ்வாய்க்கிழமை (04) இந்த கருத்தை தெரிவித்தார்.

வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த March மாதம் முதல் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையை பரிந்துரைக்காத முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் David Johnstonனின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார்.

கடந்த மாத ஆரம்பத்தில் David Johnston தான் பதவியில் இருந்து விலகிய நிலையில் பொது விசாரணைக்கான கோரிக்கைகள் மீண்டும் முன்வைக்கப்பட்டன.

இந்த விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னர் எதிர்கட்சிகளின் முழுமையான ஆதரவு பெறப்படும் என பிரதமர் Justin Trudeau அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நடைமுறைக்கு வந்த சீன விமானப் பயணிகளுக்கான விதிமுறை

Lankathas Pathmanathan

Toronto நகர சபை உறுப்பினர் Jaye Robinson காலமானார்!

Lankathas Pathmanathan

N.W.T. பயணிகள் விமான விபத்து

Lankathas Pathmanathan

Leave a Comment