December 12, 2024
தேசியம்
செய்திகள்

New Brunswick மாகாண பாலியல் நோக்குநிலை கொள்கை மாற்றத்தை விமர்சித்த மத்திய அமைச்சர்

பாடசாலைகளில் பாலியல் நோக்குநிலை குறித்த கொள்கையை New Brunswick மாகாணம் மாற்றியது தவறு என உள்கட்டமைப்பு அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார்.

கொள்கை 713 இல் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் இளைஞர்கள், அவர்களது குடும்பங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன என அமைச்சர் புதன்கிழமை (28) கூறினார்.

இந்த விடயத்தில் New Brunswick சட்டமன்றத்தில் நீடித்த விவாதம் முதல்வர் Blaine Higgsக்கு ஒரு ஆதரவான நிலையை ஏற்படுத்தவில்லை என அவர் கூறினார்.

கொள்கை 713 இல் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை எதிர்த்து அண்மையில் இரண்டு மாகாண அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.

இந்த விடயத்தில் முதல்வரின் தலைமையை விமர்சித்த மேலும் இரண்டு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை (27) அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் தமது பதவிகளை இழந்தனர்.

அமைச்சர் Dominic LeBlanc, நாடாளுமன்றத்தில் New Brunswick மாகாணத்தின் Beauséjour தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

Related posts

கனடியர்கள் தொடர்ந்து முகமூடி அணிய வேண்டும்: தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

கனடிய வரலாற்றில் முதல் முதற்குடியின முதல்வர் விரைவில்?

Lankathas Pathmanathan

COVID விதிகள் மாற்றம் குறித்து எந்த முடிவும் எடுக்கப் படவில்லை: போக்குவரத்து அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment