தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு விசாரணையை ஆரம்பிப்பதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு?

கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னர் எதிர்கட்சிகளின் முழுமையான ஆதரவு பெறப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

எதிர்கட்சிகளின் முழுமையான ஆதரவு பெறப்படாமல் வெளிநாட்டு தலையீட்டை விசாரிப்பதற்கான அடுத்த கட்டம் அறிவிக்கப்படாது என Justin Trudeau கூறினார்.

கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் David Johnston தனது பதவியில் இருந்து அண்மையில் விலகியிருந்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் அவரது நியமனத்தை ஏற்றுக் கொள்ளாதது ஒரு பிரதான காரணியாகும்.

இது போன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க இதில் எதிர்கட்சிகளின் முழுமையான ஆதரவு பெறப்படும் என Justin Trudeau கூறினார்.

இந்த விடயத்தில் எவ்வாறு முன்நகர்ந்து செல்வது என்பது குறித்து எதிர்க் கட்சிகளுடன் அரசுகளுக்கிடையேயான விவகார அமைச்சர் Dominic LeBlanc பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது இந்த பொது விசாரணை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Markham நகரில் விபத்துக்குள்ளான விமானம்!

Lankathas Pathmanathan

குடியேற்றம் குறித்த முழு அதிகாரத்திற்கான Quebec மாகாண கோரிக்கையை நிராகரித்த பிரதமர்

Lankathas Pathmanathan

Ontario NDPயின் இடைக்காலத் தலைவரானார் Peter Tabuns

Leave a Comment