February 23, 2025
தேசியம்
செய்திகள்

புதிய Toronto நகர முதல்வருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

Toronto நகர முதல்வராக தெரிவாகியுள்ள Olivia Chowக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Torontoவின் 66ஆவது நகர முதல்வராக Olivia Chow திங்கட்கிழமை தெரிவானார்.

Olivia Chowவுடன் செவ்வாய்க்கிழமை (27) பிரதமர்Justin Trudeau உரையாடினார்.

இந்த தொலைபேசி உரையாடலின் போது, தனது வாழ்த்துக்களை Olivia Chowக்கு Justin Trudeau தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் மக்களின் அன்றாட வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர்.

அதேவேளை Olivia Chowவின் வெற்றிக்கு Ontario முதல்வர் Doug Ford வாழ்த்து தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

Toronto நகர முதல்வர் பதவியை Olivia Chow எதிர்வரும் 12ஆம் திகதி ஏற்கவுள்ளார்.

 

Related posts

சிரியா தடுப்பு முகாமில் இருந்து மூன்று கனடியர்கள் விடுதலை

Lankathas Pathmanathan

Torontoவில் காணாமல் போயுள்ள தமிழ் பெண்

Lankathas Pathmanathan

Trans-கனடா நெடுஞ்சாலை Carbon வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கும் RCMP

Lankathas Pathmanathan

Leave a Comment