தேசியம்
செய்திகள்

Quebecகில் காற்றின் தரம் மோசமாக உள்ளது?

Montreal உட்பட Quebecகின் பிற பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, புகை மூட்ட எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதிகளுக்கான புகை மூட்ட எச்சரிக்கைகள் செவ்வாய்கிழமை (27) வரை அமுலில் இருக்கும் என சுற்றுச்சூழல் கனடா திங்கட்கிழமை (26) தெரிவித்தது.

திங்கள், செவ்வாய் கிழமைகளில் இடியுடன் கூடிய மழைக்கான சிறப்பு வானிலை அறிக்கையையும் வெளியிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை காரணமாக் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை சாத்தியமாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் தொழிற்கட்சியின் தேர்தல் வெற்றி கனடாவுக்கு சாதகமானது?

Lankathas Pathmanathan

McGill பல்கலைக்கழக முகாமை அகற்ற காவல்துறையிடம் முதல்வர் கோரிக்கை

Lankathas Pathmanathan

மத்திய அரசின் பொது சேவை ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தடுப்பூசிகள்!

Gaya Raja

Leave a Comment