தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் திங்கட்கிழமை

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) நடைபெறுகிறது.

John Tory வகித்து வந்த நகர முதல்வர் பதவியிலிருந்து திடீரென விலகிய நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் 2 தமிழர்கள் உட்பட மொத்தம் 102 பேர் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் நால்வர் தேர்தலில் இருந்து வெளியேறியுள்ளனர்.

வாக்காளர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குகளை பதிவு செய்யலாம்.

இந்தத் தேர்தலில் Olivia Chow வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தொடர்ந்தும் தெரிவிக்கின்றன.

Related posts

Ontario தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்

Lankathas Pathmanathan

பணியின் போது கொல்லப்பட்ட Edmonton காவல்துறை அதிகாரிகளின் இறுதி நிகழ்வு

Lankathas Pathmanathan

இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கண்டுபிடிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment