New Brunswick அமைச்சரவையில் இருந்து மற்றுமொரு அமைச்சர் பதவி விலகினார்.
அமைச்சர் Trevor Holder தனது அமைச்சு பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
முதல்வர் Blaine Higgsசின் தலைமை மதிப்பாய்வுக்கான கோரிக்கைக்கு மத்தியில் இந்த பதவி விலகல் அறிவிக்கப்பட்டது.
பாடசாலைகளில் LGBTQ கொள்கையில் மாற்றங்களை ஏற்காத பல Progressive Conservative அரசாங்க உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.
கடந்த வாரம், முன்னாள் சமூக மேம்பாட்டு அமைச்சர் Dorothy Shephard அமைச்சரவையில் இருந்து விலகியிருந்தார்.