December 12, 2024
தேசியம்
செய்திகள்

உலங்குவானூர்தி விபத்தில் மரணமடைந்தவர்களின் பெயர்கள் வெளியாகின

Chinook உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு கனடிய விமானப்படை பணியாளர்களின் பெயர்களை இராணுவம் வெளியிட்டது.

கடந்த செவ்வாய்கிழமை Ottawaவில் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்ட இரண்டு Royal கனடிய விமானப்படை உறுப்பினர்களின் பெயர்களை வெள்ளிக்கிழமை (23) இராணுவம் வெளியிட்டுள்ளது.

32 வயதான கப்டன் David Domagala, 53 வயதான கப்டன் Marc Larouche ஆகியோர் இதில் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.

இரவு நேரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, உலங்குவானூர்தி Ottawa ஆற்றில் விழுந்து நொறுங்கியது.

பலியானவர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட அவர்களது குடும்பங்கள் இராணுவத்தினருக்கு அனுமதித்துள்ளனர்.

விபத்தின் போது உலங்குவானூர்தியில் இருந்த நான்கு பேர் கொண்ட மொத்தக் குழுவினரில் பலியான பணியாளர்களும் அடங்குகின்றனர்.

இதில் காயமடைந்த இருவர் அவசர உதவி பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு Pembroke மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிறு காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து Royal கனடிய விமானப்படையின் விமான பாதுகாப்பு இயக்குநரகம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தேசிய பாதுகாப்புததுறை கூறுகிறது.

Related posts

தமிழர் மீது கூடுதல் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட Nova Scotiaவில் அவசர நிலை

Lankathas Pathmanathan

COVID பயண விதிகளை விலக்க பிரதமர் முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment