தேசியம்
செய்திகள்

Manitoba நெடுந்தெரு விபத்தில் பலியானவர்களின் விபரங்கள் வெளியாகின!

Manitoba நெடுந்தெரு விபத்தில் பலியான 16 பேரின் விபரங்கள் வெளியாகின.

நெடுஞ்சாலை விபத்தில் பலியானவர்களின் பெயர்களை RCMP வியாழக்கிழமை (22) வெளியிட்டது.

விபத்து நடந்த ஒரு வாரத்தின் பின்னர் வியாழன் பிற்பகல் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இறந்தவர்களின் பெயர்கள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

இந்த விபத்தில் பலியானவர்களின் விபரங்கள்:

Claudia Zurba, 87;
Patsy Zamrykut, 88;
Lillian Stobbe, 73;
Donna Showdra, 79;
Jean Rosenkranz, 82;
Frank Perzylo, 82
Rose Perzylo, 80;
Shirley Novalkowski, 76;
Nettie Nakonechny, 87;
Dianne Medwid, 70;
Arlene Lindquist, 68;
Helen Kufley, 88;
Ann Hill, 81;
Vangie Gilchrist, 83;
Margaret Furkalo, 82;
Louis Bretecher, 81.

Trans-Canada நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து truck வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த ஒன்பது பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு வியாழன் இரவு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Related posts

தேடப்படும் Akwesasne நபருக்கும் சடலமாக மீட்கப்பட்ட எட்டு பேருக்கும் தொடர்பு?

Lankathas Pathmanathan

Ottawa நகரில் அவசரகால நிலை பிரகடனம்

Lankathas Pathmanathan

இரண்டு மாத குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் குடும்ப உறுப்பினர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment